முறையற்ற நிர்வாகத்தை விமர்சிக்கும் உரிமை மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேசிய அரசாங்கத்திலும், நடப்பு அரசாங்கத்திலும் இடம் பெற்ற மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தை விமர்சிக்கும் உரிமை மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது.
2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு கடந்த அரசாங்கத்தை விமர்சித்தார்கள்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சி மாற்றத்தினையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் தற்போது தங்களின் தவறினை உணர்ந்து அதனை திருத்திக் கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கின்றார்கள்.
அரசாங்கம் மேற்கொள்ளும் முறையற்ற செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த தவறில் இருந்து ஒருபோதும் விலகிக் கொள்ள முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஜே.வி.பியினரும் நடப்பு அரசாங்கத்தின் பங்காளிகள். ஆகவே இடம்பெறும் நிர்வாக முறைகேடுகளுக்கு இவ்விரு தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment