ஊடகவியலாளர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் யார் என ரணிலுக்கு தெரியும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

ஊடகவியலாளர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் யார் என ரணிலுக்கு தெரியும் - உதய கம்மன்பில

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைக் குற்றவாளிகள், யார் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று கோட்டாபய தொடர்பான காய்ச்சல் வந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு கதைகளை தற்போது கூறிக்கொண்டிருக்கிறது.

அதாவது, லசந்த விக்கிரமசிங்க கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வேண்டுமானால், அமெரிக்காவின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

இவை இரண்டும் பொய்யான குற்றச்சாட்டுக்களாகும். உண்மையில், லசந்தவின் கொலை வழக்கில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறையில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, இந்த கொலைக் குற்றவாளிகளின் பெயர்கள் நாடாளுமன்றில் கூறப்பட்டன.

அந்தவகையில், இந்த கொலையை செய்தது யார் என்று தற்போதைய பிரதமருக்கு நன்றாகத் தெரியும். எனினும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணிலுக்கு முடியாது.

இதைவிடுத்து, ஏனையோர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால்தான் இந்த வழக்கு விசாரணை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

அத்தோடு, இரட்டை பிரஜாவுரிமை கொண்டிருப்பது வேட்புமனுநிராகரிக்கப்படுவதற்கான காரணியாகக் கூட இல்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இரட்டை பிரஜாவுரிமை இல்லாவிட்டால் மட்டும் போதுமானது என்பது தான் தேர்தல் சட்டமாகும்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியினர் சட்டத்தை தெரிந்துக்கொண்டு பேசுவது உகந்தது சிறப்பானதாகும்’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment