மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகின்ற காலப் பகுதியில் ஏற்படுகின்ற நட்டத்திற்காக நட்டஈடு செலுத்த வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரமுள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நேற்று பிற்பகல் சென்ற வாசுதேவ நானாயக்கார, தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சட்ட ஆலோசனையைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதாக, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment