இரவில் ஒளிரும் அரிய வகை தேரை - ஆராய்ச்சியில் அரிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

இரவில் ஒளிரும் அரிய வகை தேரை - ஆராய்ச்சியில் அரிய தகவல்

சாதாரண தேரையையும், புற ஊதா கதிர் வெளிச்சத்தில் வண்ணமயமாக ஒளிருவதையும் காணலாம்


இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டு பிடிக்கப்பட்டது. 

தற்போது இரவு நேரத்தில் மற்றும் இனச்சேர்க்கைக்காக தனது உடலில் ஒளியை உமிழும் அரிய வகை பூசணி தேரை பிரேசில் நாட்டில் வாழ்வது தெரிய வந்துள்ளது. இதை அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பகலில் அந்த தேரையின் நிறம் பூசணிக்காயின் உள்ளே இருப்பது போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் (அல்ட்ரா வயலட்) அந்த தேரையின் உடலில் உள்ள புள்ளிகள் அடர் நீலத்திலும், மற்ற பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மின்னுகின்றன.

குறுகிய ஒளி அலைகளை உள்வாங்கி பின் அவற்றை நீண்ட ஒளி அலையாக வெளியேற்றுவது அறிவியலில் ஒளிரும் தன்மை (புளோரசென்ட்) என்றழைக்கப்படுகிறது. இரவில் அல்லது புற ஊதா கதிர்களை அந்த விலங்கின் மீது பாய்ச்சும் போது அவை ஒளிருகின்றன.

இது அரிய வகை தேரையிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது. தற்போது கண்டு பிடிக்கப்பட்ட தேரையிடம் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அவைகள் ஒளியை உமிழ்கிறது என தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேரையின் ஒளிரும் தன்மைக்கு உடலில் உள்ள எலும்புகளில் காணப்படும் ஹயோலின் எனப்படும் ரசாயனம் காரணமாகும். ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட தோலின் வழியே ஊடுருவுகிறது. இந்த தேரையின் மீது புற ஊதா கதிர்களை பாய்ச்சும்போது அது ஒளியை உமிழ்வதை காணமுடியும்.

தற்போது இந்த தேரையின் ஆராய்ச்சி குறித்த தகவல்கள் சைன்டிபிக் ரிபோர்ட்ஸ் எனப்படும் யூ-டியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment