வெளிநாட்டு நீதிபதிகள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணா? - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

வெளிநாட்டு நீதிபதிகள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணா?

வை.எல்.எஸ். ஹமீட்
யுத்தமீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது அரசியலமைப்பிற்கு முரண் என்று அரசும் அவ்வாறு இல்லை என்று தமிழ்த் தரப்பும் கூறுகிறது. இதில் எது சரி?

மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பின் சரத்து 111(2)(a) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, அவர் இலங்கைப் பிரஜையாக இருக்கவேண்டுமென்று எந்த வாசகமுமில்லை.

மறுபுறம், உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் சரத்து 107(1) அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றும் 107(4) இல் அவ்வாறு தியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் (every person) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு person என்ற சொல்தான் பாவிக்கப்பட்டுள்ளதே தவிர, citizen என்ற சொல் பாவிக்கப்படவில்லை. அதேபோன்று 110(3) இல் உயர் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதிவி வகித்தவர்கள் (no person who has held office as a permanent judge of the Sc or CA...) சட்டத்தரணியாக செயற்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கும் person என்ற சொல்தான் பாவிக்கப்பட்டுள்ளதே தவிர citizen என்ற சொல் பாவிக்கப்படவில்லை. அதேநேரம் இந்த person என்பது citizen ஐக் குறிக்குமா? என்று வேறு எந்த சரத்திலும் வியாக்கியானப்படுத்தப்படவுமில்லை.

எனவே, வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது அரசியலமைப்பிற்கு முரண் என்ற அரசின் கூற்று பிழையாகும். அதேநேரம் நியமிக்கலாம் என்றும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அது அரசின் தீர்மானத்தில் தங்கியுள்ளது. நியமிப்பதற்கு தடையில்லை.

No comments:

Post a Comment