புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஊடாக பல்வேறு சலுகைகள் - News View

About Us

Add+Banner

Monday, April 1, 2019

demo-image

புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஊடாக பல்வேறு சலுகைகள்

BN-XB448_3n7xA_OR_20180118160457
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஊடாக, பெருமளவு சேமிப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான தவணைக்கட்டண திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அனுகூலங்கள் மேலும் மேம்படும் என்பதுடன், ஏப்ரல் மாதம் இறுதி வரை தொடரும்.

நாடு முழுவதிலும் 300 க்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸூடன் கைகோர்த்து, வீட்டு மேம்படுத்தல் முதல், உங்கள் அலுமாரி உள்ளடக்கங்களை மேம்படுத்துவது வரை, அன்புக்குரியவருக்கு சிறந்த அன்பளிப்பை தெரிவு செய்வது முதல், விடுமுறை பகுதியை தெரிவு செய்வது வரை, சகல பருவ காலத்துக்கும் பொருத்தமான அட்டை பெருமளவு அனுகூலங்களை வழங்கும். 

அனுகூலங்கள் மற்றும் சலுகைகள் பற்றி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி நிலுக குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “புதுவருட காலப்பகுதியில், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவார்கள்.

“Card for all Seasons” எனும் அடிப்படையில் அட்டைதாரர்களுக்கு எமது அர்ப்பணிப்பை நாம் உறுதி செய்யும் அதேவேளை, இலங்கையின் முன்னணி விற்பனை நிலையங்களுடன் நாம் கைகோர்த்து, சிறந்த சேமிப்புகளை எமது அட்டைதாரர்களுக்கு வழங்க முன்வந்துள்ளோம். 

ஆடைகள், உணவகங்கள், தங்குமிடங்கள், ஆபரணங்கள், குழந்தை ஆடைகள், விளையாட்டு பொருட்கள், பிரயாண பொருட்கள், சுப்பர் மார்க்கெட்கள் மற்றும் ஒன்லைன் தவணை கட்டண திட்டங்கள் போன்றவற்றை நாடு முழுவதிலுமிருந்து பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *