போதைப் பொருளுக்கு எதிராக "சத்தியப்பிரமானம்" செய்ய வேண்டும் - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

போதைப் பொருளுக்கு எதிராக "சத்தியப்பிரமானம்" செய்ய வேண்டும் - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "போதைப் பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் சகல அரச காரியாலயங்களிலும் சகல திணைக்களங்களிலும் சகல அமைச்சுக்களிலும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு "நாங்கள் போதை பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" என உறுதிப்பிரமானம் செய்யவேண்டும்.

ஜனாதிபதி தலைமையில் இதன் பிரதான வைபவம் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் சகல அரச நிறுவனங்களிலும் காரியாலயங்களிலும் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக உறுதிப்பிரமானம் எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment