பலஸ்தீன் பற்றி அரபு லீக் மாநாட்டில் அதிக அவதானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

பலஸ்தீன் பற்றி அரபு லீக் மாநாட்டில் அதிக அவதானம்

சிரியாவிடம் இருந்து ஆக்கிரமித்த கோலன் குன்று பகுதியில் இஸ்ரேலுக்கு இறைமை அந்தஸ்து வழங்கிய அமெரிக்காவின் முடிவை அரபு லீக் நிராகரித்துள்ளது.

பலஸ்தீன நாடொன்றை உருவாக்குவதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திய அரபு லீக், பல தசாப்தங்கள் நீடிக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே பாதுகாப்பு மற்றும் அமைதி தங்கி இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துனீசிய தலைநகரில் நடைபெற்ற அரபு லீக் தலைவர்கள் மாநாடு முடிவில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், கோலன் மேட்டு நிலப்பகுதி மீதான சிரியாவின் உரிமைக்கு முழுமையான ஆதரவு வெளியிடப்பட்டது.

பிராந்தியம் எங்கும் மோதல்கள் நீடித்து வரும் நிலையிலேயே தமாதத்திற்கு உள்ளான 30ஆவது அரபு லீக் மாநாடு நடைபெற்றது. அரபு உலகில் தொடர்ச்சியான மோதல்கள் ஏற்க முடியாது என்று இந்த மாநாட்டின் இறுதி அறிக்கையை வெளியிட்ட துனீசிய வெளியுறவு அமைச்சர் கெமைஸ் ஜினோய் குறிப்பிட்டார்.

எனினும் பிராந்தியத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சினைகள் இந்த மாநாட்டில் அதிகம் அவதானத்தைப் பெறவில்லை.

கோலன் குன்று தொடர்பான அமெரிக்காவின் பிரகடனம் மற்றும் பலஸ்தீன பிரச்சினை இதில் மையமாக இருந்தது. கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன நாட்டுக்கு தொடர்ச்சியான ஆதரவை சவூதி மன்னர் அப்துலஸிஸ் அல் சவூத் இந்த மாநாட்டில் குறிப்பிட்டதோடு ஜெரூசலம் புனித தலங்களின் காவலராக உள்ள ஜோர்தான் மன்னர் அப்துல்லா, அல் அக்ஸா பள்ளிலாசல் வளாகத்தை தொடர்ந்து பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment