இஸ்ரேலிய சுற்றிவளைப்பில் பலஸ்தீனர் சுட்டுக் கொலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

இஸ்ரேலிய சுற்றிவளைப்பில் பலஸ்தீனர் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் கடந்த திங்கள் இரவு நடத்திய சுற்றிவளைப்பின்போது ஒரு பலஸ்தீனர் சுட்டக்கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசத்தின் வடக்கில் உள்ள குலன்தியா அகதி முகாமுக்கு அருகில் 23 வயது முஹமது எட்வான் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.

எட்வான் தனது வாகனத்தில் இருந்தபோது நெருங்கிய இடைவெளியில் வைத்து சுடப்பட்டதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

அவரது உடலை எடுத்துச் சென்ற இராணுவம் பின்னர் மருத்துவர்களுக்கு கையளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எட்வான், ரமல்லாஹ் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மேலும் மூவருக்கு சிகிச்சை அளித்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேற்குக் கரையின் பலஸ்தீன வீடுகளில் இஸ்ரேல் சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment