சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 05 வருடங்களுக்கு மேற்பட்ட சிறந்த சேவைக் காலத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்ட உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த 51 பேருக்கு மாவட்ட அதிகாரி நியமனம் வழங்கப்பட்டது.
இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமனக் கடிதங்கள் வழங்கி வைத்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment