மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்

நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 14ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அநுராதபுரம் பிரதேசத்தில் கே.டி லால்காந் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். 

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

லால்காந்த ஓட்டிச் சென்ற கெப் ரக வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் அதில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment