தொற்றா நோய் தொடர்பான கையடக்க தொலைபேசி ஆய்வு - சுகாதார அமைச்சு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

தொற்றா நோய் தொடர்பான கையடக்க தொலைபேசி ஆய்வு - சுகாதார அமைச்சு நடவடிக்கை

தொற்றா நோய் தொடர்பான கையடக்க தொலைபேசி ஆய்வை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய 1995 என்ற கையடக்க தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1995 இலக்கத்தின் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்த தொலைபேசி அழைப்பின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்காக பங்களிப்பு செய்ய முடியும். 

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் குரல் பதிவின் போது இருபது கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 5 தொடக்கம் 7 நிமிடங்கள் வரை செல்லும் பதில்களை அளிக்கும் போது பதிலுக்கான இலக்கத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டும். 

லேன் போன் தொலைபேசி இலக்கத்துக்கு இந்த தொலைபேசி அழைப்பு கிடைக்காது. வார இறுதி தினங்களிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் இந்த சேவை இடம்பெறாது. இந்த கணிப்பீட்டில் ஒருவர் கலந்து கொண்டால் மீண்டும் தொலைபேசி அழைப்பு வராது. 

கட்டண பெறுமதி அறவிடப்படமாட்டாது. உங்களது வயதை தவிர்ந்த ஏனைய நபர்களது தகவல்கள் வழங்கப்படமாட்டாது. அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படும். என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment