கதிர்காமம் விஷ்னு ஆலயத்தில் இன்று (03) அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்னு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆலயம் ருகுணு கதிர்காமம் மகா தேவாலயத்தோடு இணைக்கப்பட்டதாக உள்ளது.
இத் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீயிட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தீயிட்டுக் கொண்டதன் காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சம்வபம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment