கிண்ணியா பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெருந்தெருக்கள் அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெருந்தெருக்கள் அமைச்சானது கடந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் கொந்திராத்து கொமிஸ் மாபியாக்களுக்காவும் பயன்படுத்தப்பட்ட அமைச்சாகும். இந்த அமைச்சின் ஊடாக ஒரு திட்டம் செயற்படுத்தப்படும் போது அந்த திட்டத்தின் பாரியளவிலான நிதி விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டது நாம் அறிந்ததே.
இந்த அமைச்சை பயன்படுத்தி பசில் ராஜபக்ச செய்த டீல்கள் பற்றி பலமுறை இந்த பாராளுமன்றத்தில் பேசபட்டுள்ளது. அதைப்பற்றி நானும் பேசி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
இந்த அமைச்சை எமது அரசு பொறுப்பேற்றவுடன் இந்த நிலைமைகள் மாற்றப்பட்டுள்ளது. கௌரவ அமைச்சர் கபீர்காசிமின் கட்டவுட்களோ முன்னால் அமைச்சராக இருந்த கௌரவ லக்ஸ்மன் கிரியள்ளவின் கட்டவுட்களையோ பிரதமரின் கட்டவுட்களையோ வீதி முழுவதும் வீதிகளை மறைக்கும் வண்ணம் நாம் அமைக்கவில்லை. நாம் மக்களுக்காக வேலை செய்கிறோம் கொமிஸ்களுக்காகவும் விளம்பரத்துக்காகவும் அல்ல.
எமது பகுதியிலும் தவறுகள் இல்லாமலில்லை. அவை அனைத்தையும் சரிசெய்து முன்னோக்கி பயணிக்க எமது அமைச்சர் கௌரவ கபீர் காசிம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை நான் அறிவேன்.
நான் பிரதிநித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் பற்றி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரலாம் என நினைக்கிறேன்.
கிண்ணியா பிரதேசத்தின் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பிரதேச மக்களால் பல வருடகாலமாக முன்வைக்கப்படுகிறது. அப்பிரதேசத்தின் சனத்தொகைக்கும் போக்குவரத்து நெருக்கடிக்கும் இப்போதுள்ள வீதியின் அகலம் போதுமானதல்ல.
அந்த வீதியை அமைச்சர் நேரடியாக பார்த்தால் அது பிரதானவீதியா அல்லது ஒழுங்கை ஒன்றா என்ற சந்தேகம் அமைச்சருக்கே ஏற்படும். இந்த வீதி இரண்டுபக்கங்களும் பதினைத்து அடியாக அகலமாக்க தேவையான SURVEY உட்பட அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்த வீதியை அகலமாக்கும்போது உடைக்கப்படவுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதுக்கு இதுவரை அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆகவே இந்த வருட நிதியிலாவது இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீதி ஓரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தால் நஷ்டஈடுகளுக்கு வழங்கப்படும் பாரியளவிலான நிதியை நாம் சேகரிக்கலாம். உதாராணமாக வீதி ஓரத்தில் தற்காலிக கொட்டில்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிடின் அந்த தற்காலிக கட்டிடங்கள் சில வருடங்களில் நிரந்தர கட்டிடங்களாக மாற்றமடையும்போது அதற்கு நஷ்டஈடாக பாரிய தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் பிரதான வீதிகள் பல இன்னும் கிரவல் மற்றும் மணல் வீதிகலாகவே காணப்படுகின்றன. இந்த வீதிகள் பிரதேச சபை நகரசபை மற்றும் RDD யின் கட்டுபாட்டில் காணப்படுவதே இதற்கான காரணங்களாகும். இந்த வீதிகளை புனன்னிர்மானம் செய்ய உள்ளூராட்சி மன்றம் மற்றும் RDD யில் போதியளவில் நிதி இல்லை.
எனவே உள்ளூராட்சி மன்றம் மற்றும் RDDயின் கட்டுபாட்டில் உள்ள பிரதான வீதிகளை இனம்கண்டு அவை RDA வின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உடனடியாக அவை புனனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான சில வீதிகளை இங்கு குறுப்பிடலாம் என நினைக்கிறேன்.
1- கிண்ணியா ஆலங்கேணி நெடுந்தீவு பிரதான வீதி.
2- கிண்ணியா கச்ச்சகொடுத்தீவு தொடக்கம் மகரூப்
கிராமம் வரையிலான வீதி’.
3- பாலத்தோப்பூர் தொடக்கம் சேருவில
வரையிலான வீதி.
4- நாமல்வத்த தொடக்கம் மொரவவ வரையிலான
வீதி.
5- முள்ளிப்பொத்தானை தொடக்கம் சூரங்கள்
வரையிலான வீதி.
இந்த வீதிகளை காபட் வீதிகளாக நிர்மாணிக்க தேவையான நிதியை அமைச்சர் ஒதுக்கி தரவேண்டும்.
நல்லாட்சி ஏற்பட்டது முதல் கிண்ணியா மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கிண்ணியாவுக்கு ஜனாதிபதி வந்து வழங்கிய வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதே.
தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவுடன் சேதமடைந்துள்ள குறிஞ்சாக்கேணி மாஞ்சோலை பாலங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் செய்யப்படும் என ஜானாதிபதி கூறிய வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த பாலங்கள் சேதமடைந்து தற்காலிக பாலமே இப்போது போடப்பட்டுள்ளது எதிர்வரும் மாரி காலத்தில் அந்த தற்காலிக பாலமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது .
குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு 750 மில்லியனும் மாஞ்சோலை பாலத்துக்கு 50 மில்லியனும் தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இந்த நிதியை ஒதுக்கி தருமாறு கடந்த வருடம் பாராளுமன்றத்தில் கேள்வி பதிலில் நான் கேள்வி எழுப்பியதுக்கு இது மாகாணசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உளதால் இதை மாகாண சபையே செய்யவேண்டும் என கூறப்பட்டது.
அதன்பின் இந்த பாலத்துக்கான நிதியை ஒதுக்குமாறு கிழக்குமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த பொது மாகாண சபையில் போதியளவு நிதிகள் இல்லை என கூறி இதை புனரமைக்குமாறு அவரும் மத்திய அரசுக்கே சிபாரிசு செய்துள்ளார்.
எனவே இந்த பாலங்களை மத்திய அரசுக்குள் உள்வாங்கி உடனடியாக புனனரமைக்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு சேதமடைந்த புல்மோட்டை செல்லும் வழியில் உள்ளா யானு ஓயா பாலமும் இதுவரை புனனரமைக்கப்படவில்லை இதன் புனரமைப்புக்கு மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
முறிஞ்சன் ஆறு பாலம் அமைக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் முழு கிண்ணியா பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
வடசலாறு, வேதத்தீவு போன்ற பல பாலங்கள் இன்னும் புனரமைக்கப்படாமலே காணப்படுகின்றன. எனவே திருகோணமலைக்கு அமைச்சர் விஜயம் செய்து இந்த குறைபாடுகளை நேரில் பார்வையிடவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கட்டுபடுத்த போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.
அத்துடன் கடந்த அரசின் மூலம் முன்னெடுக்கப்பட்ட “மகநெகும” செயல்திட்டத்தை ஒப்பந்தம் செய்த ஒப்பந்தகாரர்களின் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாதுள்ளது. இதுதொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment