களுகங்கையை இடைமறித்து இரத்தினக்கல் அகழ்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கற்கள் அகழப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இரத்தினபுரி சமன் தேவாலயமும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் இரத்தினக்கல் அகழ்வதற்குத் தடை விதிக்கப்பட்டும், சிலர் இரகசியமாக இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயமாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும், இந்தச் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்வதாக பிரதேச பொதுமக்கள் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இவ்விடயமாக சமன் தேவாலய நிர்வாகம் இரத்தினக்கல் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்ததால், சமன் தேவாலயத்தை சுற்றி அமைந்துள்ள களுகங்கை ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment