மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பிரதான அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார் - News View

About Us

Add+Banner

Friday, March 1, 2019

demo-image

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பிரதான அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

53008542_10156800694626327_942664958338924544_n
மகாவலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதான அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை மேற்பார்வை செய்வதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன செயற்பாட்டு நிலையத்தை நேற்று (28) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கமைவாக குறித்தவொரு சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் நீர்த்தேக்கங்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்த நிலையத்தின் ஊடாக நீர்ப்பாசன பொறியியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறுவதோடு, வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துதல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட நீர்ப்பாசன பொறியியல் தொழிநுட்பத்திற்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்த நிலையத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

பொல்கொல்ல, விக்டேரியா, மாதுறு ஓய, கொத்மலை, ரந்தெனிகல, மொரகஹகந்த, களுகங்கை மற்றும் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓய நீர்த்தேக்கம் உள்ளிட்ட மகாவலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள் மற்றும் பிரதான அணைக்கட்டுக்களின் நீர் செயற்பாடுகள் இந்த நிலையத்தினால் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் மகாவலி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தெற்காசியாவிலேயே இத்தகையதோர் நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை புதிய பாதையில் இட்டுச் சென்ற, விவசாய மக்களின் வாழ்வை பலப்படுத்திய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் புத்துயிர் பெற்றுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகின.
53034599_10156800694641327_9105500408922505216_n
1970 பெப்ரவரி 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் காணி, நீர்ப்பாசன, மின்சக்தி அமைச்சரான சீ.பீ.டி.சில்வா ஆகியோரால் மகாவலி பாரிய அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்டமாக இந்நாட்டின் நீர்ப்பாசன கலாசாரத்தின் திருப்புமுனையாக அமைந்த பொல்கொல்ல, போவதென்ன நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அன்று பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணியால் ஆரம்பமான பாரிய மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் 05 பாரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் எண்ணக்கரு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மொரகஹகந்த - களுகங்கை பாரிய நீர்த்தேக்க திட்டம் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன் நிறைவுபெற்றது.

மகாவலி அபிவிருத்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய செழிப்பான, வளமிக்க விவசாய சமுதாயத்தை உருவாக்கும் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் பாரிய இயற்கை வளங்களுள் முதன்மையான மகாவலி கங்கையின் ஊடாக நாட்டில் விவசாயம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை மானிட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான துரித வேலைத்திட்டங்கள் தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டலில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *