அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது 40 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி லயன் அறை ஒன்றில் உள்ள அரிசி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்து. 

பொதுவான நபர் ஒருவரை அனுப்பி வைத்து இந்த வலம்புரி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment