போலி அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்தல் மற்றும் வாகனங்களின் செஸ் இலக்கத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட விஷேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து வேன் ஒன்று மற்றும் அதனை பதிவு செய்வதற்கான போலி சான்றிதழ், போலி அடையாள அட்டைகள் 03, போலி சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பொலிஸரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment