நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு புதிய பொறுப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு புதிய பொறுப்புக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிற்கு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி, சிறுநீரக நோய்த்தடுப்பு, தேசிய போதைப் பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய செயற்றிட்டங்களை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஜனாதிபதியால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னியில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினைக் கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை கட்சி பேதம் கடந்து நீதிமான முறையில் முன்னெடுப்பதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி செயற்றிட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக துரிதமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வன்னி மாவட்டத்தில் அந்த கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் காதர் மஸ்தானிடம் கையளிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment