எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர். 

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment