முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடரவுள்ளதாக சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வசந்த கரன்னாகொடவை தவிர வழக்கில் ஏனைய சந்தேகநபர்களான முன்னாள் கடற்படை ஊடகப்பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, கமாண்டர் சுமித் ரணசிங்க, லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி, முன்னாள் கடற்படை அதிகாரி நிலந்த சம்பத் முனசிங்க உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நேற்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலந்த சம்பத் முனசிங்க எனும் நேவி சம்பத் உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment