மருதமுனை அல்-மனார் வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் கல்வியமைச்சருக்கு சிபாரிசு! - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

மருதமுனை அல்-மனார் வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் கல்வியமைச்சருக்கு சிபாரிசு!

மருதமுனை அல்-மனார் வித்தியாலயம் நூறு வருடங்களை தாண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள மிக முதன்மையான ஒரு பாடசாலையாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கிழக்கு மாகாணத்தில கட்டபட்ட முதல் பாடசாலையாகவும் இது கருதப்படுகிறது. அல்-மனார் வித்தியாலயம் சுமார் 1400 மாணவர்களை கொண்ட 1AB பாடசாலையாகும்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட அரசியல் தலைவர்களையும், கல்விமான்களையும், வைத்தியர்களையும் உருவாக்கிய இந்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபடாமல் இருந்தது மிகக் கவலைக்குரிய விடயமாகும். 

இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான ஆளுநரின் அனுமதியை பெறுவதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த பாடசாலை நிர்வாகமும், அரசியல் தலைமகளும் முயற்சித்தும் பயனாளிக்கவில்லை. 

அண்மையில் இப்பாடசாலை தொடர்பாக நிர்வாகிகள், அரசியல் தலைமைகள் கெளரவ கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க உடனடியாக ஆளுநர் மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களை பாடசாலைக்கு அனுப்பி அறிக்கைகளை பெற்று உடனடியாக இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த கல்வியமைச்சுக்கு சிபாரிசு செய்தார்.

No comments:

Post a Comment