சாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை - கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி! - News View

About Us

About Us

Breaking

Saturday, March 30, 2019

சாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை - கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி!

எஹேலியகொட பகுதியில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி சாதாரண தரப் பரீட்சையில் 8A, 1B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவியே இவ்வாறு சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி தெரிவித்துள்ளார்.

தனது ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment