திருகோணமலை கந்தளாய் பகுதியில் தொலைபேசியில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை இம்மாதம் 6ஆம் திகதி வரை சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா நேற்று (2) உத்தரவிட்டார்.
கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய இருவரே சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சிறுவர்களும் ஒரு கட்டடத்தின் கீழ் தொலைபேசியில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரினால் சந்தேக நபர்களை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கந்தளாய் நிருபர் - எப்.முபாரக்
No comments:
Post a Comment