தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சமுகத்தை வலுப்படுத்துதல் மற்றும் வறுமைக்கு உட்பட்டவர்களை பாதுகாக்கும் வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்பிக்கப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நுண்நிதி கடனை தள்ளுபடி செய்ய தீர்மானத்தை மேற்கொண்டோம். வறட்சி நிலவிய மாவட்டங்களில் இந்த கடனைப் பெற்ற 45,139 பேர் விடிவிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இந்த நிதியை செலுத்தும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் காலை ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் மேலும், உரையாற்றுகையில்.
அரசியல் சதியின் காரணமாவே வரவு செலவுத் திட்டத்தை மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கவேண்டி ஏற்பட்டது. நாட்டின் நுண்நிதி பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். முடிஸ் நிறுவனம் எம்மை குறைவாக தரப்படுத்தியுள்ளது. சதி இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டி வீதம் அதிகரித்தது. நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்கள் வெளியேறினர்.
சதியின் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட முடியாது. பொருளாதாரத்து ஏற்பட்ட பாதிப்பையும் மதிப்பிட முடியாது. இலங்கைக்கு சர்வதேச ரீதியில் சுற்றுலாத் துறையில் முதலாவது இடம் கிடைத்திருந்தது. என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. என்ட பிரைஸ் ஸ்ரீலங்கா கம்பெரலிய ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக கிராம பொருளாதாரத்தை வலுவூட்டப்படுகிறது. இதன் ஊடாக கிராமத்திலுள்ள குளங்கள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. சிறியளவிலான மீள்திட்ட முறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
வாராந்த சந்தைகள் அமைக்கப்படுகின்றன. சிறுவர் பூங்கா அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் முதலியனவற்றுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. கம்பெரலி திட்டத்தின் ஊடாக பாரிய வேலைதிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் உண்டு. சிலர் இவை கனவென கூறுகின்றனர். என்றும் அவர் சுட்டிகாட்டினார்.
நாட்டில் பெறுமதிமிக்க கலைஞர்களுக்கு மதிப்பளித்துள்ளோம். ஜோன் டி. சில்வா கலையரங்கத்தை புனரமைப்பதற்காக 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment