2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது - டியூ.குணசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது - டியூ.குணசேகர

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டதென கம்பியூனிஸ்ட் கட்சித் தலைவர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளமை இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தெளிவாகுவதாகவும், அவர் கூறியுள்ளார்.

எனவே, கடன் நெருக்கடியைச் சமாளிக்க முதற்கட்ட நடவடிக்கையாக அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment