நாடு பூராகவும் 1176 இலவச வைபை வலயங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

நாடு பூராகவும் 1176 இலவச வைபை வலயங்கள்

இலங்கையர் அனைவருக்கும் இலவச வைபை வசதிகளை வழங்க அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி 1176 வைபை நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வைபை வலயங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக கொள்கை அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த வைபை வசதிகளை தொடர்பாடல், தகவல் தொழில்நுட்ப கண்காணிப்பு நிலையத்துடன் இணைந்து அரசாங்கம் வழங்கியுள்ளது. ரயில், பஸ் நிலையங்கள், வாசிகசாலைகள் போன்ற தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் நபரொருவர் நூறு மெகாபைட் வைபை அலகைப் பாவதிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2019 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் 4,55,741 பேர் இணையத்தளத்துள் நுழைவதற்காக இவ்வைபை வசதிகளைப் பாவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment