அரச மானியப் பணத்தை கொடுக்க வங்கிகள் மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

அரச மானியப் பணத்தை கொடுக்க வங்கிகள் மறுப்பு

நுண்கடனை பெற்றுச் செலுத்த முடியாத குடும்பப் பெண்களுக்கு அரசாங்கத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மானியமாக வழங்கப்படுவதாக அறிவித்த திட்டம் இருக்கின்ற போதிலும், வங்கிகள் அப்பணத்தை கொடுக்க மறுப்பதாக வவுனியா நகர சபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி தெரிவித்துள்ளார். நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக குடும்ப பெண்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவதாகவும் அவர் கூறினார். 

வவுனியா நகர சபையின் பதினொராவது அமர்வு நகர சபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இககூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறு கடன்களை குடும்பப் பெண்களுக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ள நிதி நிறுவனங்கள், கடனை மீளச் செலுத்தத் தகுதியுடையவர்களிடம் மாத்திரம் அறவிடுமாறு சபையில் முன்மொழிவதாக தெரிவித்தார்.

நுண்கடனை பெற்றுச் செலுத்த முடியாத குடும்பப் பெண்களுக்கு அரசாங்கத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மானியமாக வழங்கப்படுவதாக அறிவித்த திட்டம் இருக்கின்ற போதிலும், வங்கிகள் அப்பணத்தை கொடுக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அரசாங்க அதிபருடன் நகர சபையினர் கலந்துரையாடி வங்கிகளை ஒன்றிணைத்து பெண்களின் கடன் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment