எம்.எஸ்.எம்.ஸாகிர்
மூதூர், ஆலிம்நகர், ஜின்னா நகர், ஜும்ஆப் பள்ளி நிர்வாகத்தினர் மஸ்ஜிதை மையப்படுத்தி ‘கிராமத்தில் சுகாதார முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளுக்கு அமைய நாளை வெள்ளிக்கிழமை (01) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு அமைதி ஊர்வலமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ் ஊர்வலத்தில் மூதூர் பிரதேச செயலாளர் உட்பட அதன் உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொள்வதுடன் இதன்போது பொதுமக்களை விழிப்புணர்வூட்டி, அறிவுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கவுள்ளதோடு, பிரதேசத்தில் இருக்கின்ற வியாபார நிலையங்களுக்கு போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிகர் ஒட்டப்படவுள்ளதாகவும் மஸ்ஜிதின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி முபீஸ் எமக்குத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment