விடுதலைப் புலிகள் என்ற தீக்குள்ளே இருந்து தீக்குளித்து வந்தவன் நான், அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

விடுதலைப் புலிகள் என்ற தீக்குள்ளே இருந்து தீக்குளித்து வந்தவன் நான், அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாம்

விடுதலைப் புலிகள் என்ற தீக்குள்ளே இருந்து தீக்குளித்து வந்தவன் நான். அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாமென முன்னாள் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாநகர சபை அமர்வின் சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்த போது, ஊழல் இடம்பெற்றதாகவும், அத்துமீறிய நியமனங்கள் வழங்கியதாகவும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

என்னைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த ஊழல்வாதிகள் அல்ல. தீர்மானிக்க வேண்டியவர்கள் எனது மக்கள். நான் எந்தக் காலத்தில் என்ன செய்தனான் என்று தீர்ப்பளிக்க வேண்டியது மக்கள் தான். அந்த மக்கள் தீர்ப்பையே நான் வரவேற்கின்றேன். 

வழக்கு வேண்டாம் என்னிடம் அந்தளவிற்கு காசும் இல்லை. மகேஸ்வரி நிதியத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநகர சபைக்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனோகரனுக்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பது பற்றிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. 

மாநகர சபை தேவை எனின், கடைகளை இடித்துத் தள்ள முடியும். அல்லாவிடின், கடைகளை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். மனோகரன் ஏதோ ஒரு சூழ்நிலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார் போல் இருக்கின்றது. 

கஸ்தூரியார் வீதியில் உள்ள கடைகள் ஒப்பந்தத்திற்கு மேலாக கட்டப்பட்டு தவறுதலாக கொடுக்கப்பட்டிருந்தால், முழுமையாக கொடுக்கப்பட்டிருந்தால், அதிகாரப் பரவலாக்கல் பிழை, சட்டவரையறைக்குள் பிழை எனின், என முழு அதிகாரத்தையும் ஒருவருக்குக் கொடுப்பதென்றால், சபை ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். 

மக்களைப் பொய்யர்களாக மாற்றிப் பொய்யான தகவல்களைக் கொடுத்து ஏமாற்ற வேண்டாம். பல பேர் எனக்கு எதிராக செயற்படுகின்றார்கள். சீதைக்குத் தீக்குளித்தவன் நான். யார் தீக்குளிக்க வேண்டுமென்று சொன்னார்களோ, அவர்களுக்குள்ளேயே தீக்குளித்து வந்தவன் நான். 

1979 ஆம் ஆண்டில் இருந்து, தீக்குள்ளேயே வாழ்ந்தவன் நான். என்னில் ஒரு தவறு இருந்திருந்தால், எப்பவோ முடிக்கப்பட்டிருப்பேன். கொண்டு சென்று விசாரித்து விட்டு கௌரவமாகத் தான் கொண்டு வந்து விட்டவர்கள். அவர்களுக்கு ஏலாத வித்துவான்கள் இங்கு இருக்கின்றார்களோ? 

கதராகவும் இருக்கலாம். சாமியாகவும் இருக்கலாம். குருக்களாகவும் இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். நான் அந்த தீக்குள்ளாக வந்தவன். இதில் பிழை விட்டிருந்தாலும் விடுதலைப் புலிகள் என்னை விட்டிருக்கமாட்டார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மற்றவர்களைப் போன்று, குந்தி இருந்துகொண்டு நான் கதைக்கவில்லை. அரசியல் கத்துக் குட்டியும் அல்ல நான். அரசியல் கத்துக் குட்டிகள் எனக்குப் படிப்பிற்க கூடாது. ஆனால் உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாநகர முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் பெண்மனிக்கு இந்த விடயங்கள் தெரியாது என்றார். 

யாழ். நிருபர் சுமித்தி

No comments:

Post a Comment