ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று இலங்கையில் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று இலங்கையில்

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்திவருகிறது. அந்த வகையில் நேற்று (புதன்கிழமை) பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது, இலங்கை படையினரிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு ஆயுத தளபாடங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்துக் கொடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இக்குழு முன்வந்துள்ளது.

குறிப்பாக, இலங்கையின் கவசப்படைப் பிரிவு மற்றும் இயந்திர காலாற்படைப் பிரிவு, மின்னியல் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப் பிரிவுகளில் உள்ள கவச வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்துக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் நடக்கின்ற பயிற்சிகளில் இலங்கைப் படையினரும் பங்கேற்பதற்கு இந்தக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, இப்பேச்சுக்களின் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா அளித்த பங்களிப்புக்கு இலங்கை இராணுவத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ, கேணல் சேர்ஜி உர்சென்கோ, லெப்.கேணல் றோமன் போப்ரஸ், விக்டர் பெட்ரோவ், றோமன் செபுர்னொவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ரஷ்ய தூதுவர் யூரி பொறிசோவிச் மற்றும் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் இலங்கையின் அரச உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான பேச்சுக்களில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment