சர்வதேசம் சந்தேகிப்பது போன்று சமூகங்களிடையே பிரச்சினை இல்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

சர்வதேசம் சந்தேகிப்பது போன்று சமூகங்களிடையே பிரச்சினை இல்லை

நாட்டிலுள்ள சமூகங்கள் அனைத்தும் பரஸ்பர தோழமையுடன் எவ்வித பிரச்சினையுமின்றி இருப்பதாக, மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் மியன்மார் ஊடகவியலாளர்கள் குழாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்று (புதன்கிழமை) மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருடன் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டனர். இதன்போதே அநுநாயக்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்த அவர், ”கடந்த கால யுத்தத்தின்போது இராணுவம், பொதுமக்கள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் சம்பவித்தன.

ஆனால், சிலர் கூறுவது போன்று நாட்டிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இனத்தவரும் இங்கு ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், சில இடங்களில் இடம்பெறும் சிறு சிறு இனவாத செயல்கள் முழு தேசத்திற்கும் அவப்பெயரை விளைவிப்பதாக அமைந்துள்ளன.

சர்வதேசத்திடம் யார் என்ன கூறினாலும் நாட்டில் அனைத்து சமூகங்களும் பரஸ்பர தோழமையுடனேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment