சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் 14 பேர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 04.30 மணியளவில் காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி தங்கியிருந்தவர்கள் சீனப் பிரஜைகள் என்று தெரிய வந்துள்ளது. 22 - 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment