Maersk Holdings பிரதம நிறைவேற்று அதிகாரி Soren Skou நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இலங்கையில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக Maersk Holdingsனின் பங்களிப்பு குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக தற்போது Maersk Holdings நிறுவனம் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இதன்மூலம் வசதிகள் ஏற்படுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன்மூலம் இலங்கையில் பொருளாதாரத்திற்கும் பாரிய ஒத்துழைப்பு கிடைக்குமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தென் ஆசியாவின் Maersk Holdings நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் தலைவர் கிஷான் பாலேந்திரன், தென் ஆசியா கேட்வே டேமினல்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொமேஷ் டேவிட், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் அசல வீரக்கோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment