நேபாளத்தில் இன்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
நேபாளத்தின் டேராதும் (Tehrathum) மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா அதிகாரி உள்ளிட்ட 6 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹெலிகொப்டர் திடீரென கீழே வீழ்ந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment