போதை விற்பனையாளர் மற்றும் கொள்வனவுக்கு வந்த 11 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 9, 2019

போதை விற்பனையாளர் மற்றும் கொள்வனவுக்கு வந்த 11 பேர் கைது

வென்னப்புவவில் வீடொன்றில் வைத்து போதை கடத்தல்காரர் என தெரிவிக்கப்படும், 'ஓலு மரா' என்கின்ற சானக்க மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) இரவு 8.45 மணியளவில் வென்னப்புவ, கிரிமெட்டியான வத்தை, லுணுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது, குறித்த சந்தேகநபரிடம் இருந்து 2.3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபருடன், குறித்த வீட்டிற்கு போதைப்பொருள் கொள்வனவுக்கு வந்த மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் (10) மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment