அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் - CCTV காட்சிகள் வௌியாகியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 16, 2019

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் - CCTV காட்சிகள் வௌியாகியது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமாக தகல்கள் வௌியாகியுள்ளன. 

சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன. 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் சிறைக்கைதிகள் முகங்கொடுத்த சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் குறித்த அமைப்பினால் இன்று தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment