"தமிழினத்தின் காவலனே வருக வருக" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரம்மாண்ட வரவேற்பளிக்கபட்டதுடன் பாராளுட்டு விழாவும் இடம்பெற்றது.
இன்று (16) பிற்பகல் 3.30 மணியளவில், வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பருத்தித்துறை நகரில் இருந்து வரவேற்கப்பட்டு, மெத்தக் கடை சிவன் கோவில் பகுதியில் பாராட்டு விழா இடம்பெற்றது.
வடமராட்சி பொது அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்களினால், பருத்தித்துறை நகரப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சுமித்தி தங்கராசா
No comments:
Post a Comment