இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் - ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் பாகிஸ்தான் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, January 2, 2019

demo-image

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் - ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் பாகிஸ்தான்

IKM_01012019_SPP
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் இப்போது பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளையும் தாண்டி வேறு நாடுகளிடமும் அணு ஆயுதங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்திய இராணுவம் நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில், இந்திய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷ்யாவிடம் இருந்து ஜி.பி.எஸ் பொருத்திய 600 பீரங்கி தாங்கிகளை பாகிஸ்தான் வாங்குகின்றது.

பதான்கோட் விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானின் எல்லைகளில் பதுங்கி இருந்தனர். இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லைக்கே ஊடுருவி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் முகாமை அழித்தது.

இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் நவீன ஆயுதங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவுக்கும் சவால் விடும் வகையில் இருக்கின்றன. இதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன.

ரஷ்யாவிடம் தரமான தொழில்நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்த ஏதுவான ஏராளமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. தற்போது வரை சீனாவின் கண்டுபிடிப்பு உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றது பாகிஸ்தான். இந்நிலையில்,சீனாவையும் தாண்டி ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

இருகட்டமாக ரஷ்யாவிடம் இருந்து T-90 உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி தாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீற்றர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது. 

இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்' ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளையும் பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் மிகவும் நட்புறவு நாடான ரஷ்யாவிடம் இருந்தே அணு ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகின்றது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *