வெள்ளவத்தையில் ரூபா 1.8 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) பிற்பகல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த நபரிடமிருந்து 1.513 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வெள்ளவத்தை கொழும்பு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனையின்போது, கைது செய்யப்பட்ட குறித்த நபர், ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கொழும்பு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment