நேர்மையாகப் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சொந்தப் பணத்தில் சட்டவல்லுநர்களை நியமிக்கவுள்ளேன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

நேர்மையாகப் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சொந்தப் பணத்தில் சட்டவல்லுநர்களை நியமிக்கவுள்ளேன்

நேர்மையாகப் பணியாற்றும் அரச அதிகாரிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டால் அவர்களுக்காக தமது சொந்தப்பணத்தில் சட்ட வல்லுநர்களை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்தார். தமது அமைச்சின் அதிகாரிகள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு பேசிய அவர், பணக்கார நாடாக மாறும் பயணத்தில் அரச பணியாளர்களுக்கு பாரிய பணிகளை ஆற்றும் பொறுப்புள்ளது. இப்பணிகளின்போது ஏதாவது விடயத்தில் சட்டத்திற்கு முன்கொண்டு நிறுத்தப்படும் அதிகாரிகளுக்காக வாதாட எனது சொந்தப்பணத்தில் சட்டவல்லுநர்களை நியமிக்க உள்ளேன்.

2025ம் ஆண்டளவில் அரசாங்கம் எதிர்பார்க்கும் ஏற்றுமதி வருமானம் 30 பில்லியன் டொலராகும். எனினும் இப்புதிய வருடத்தில் 25 பில்லியன் டொலராக அதிகரிக்க செய்வதே அரசின் எதிர்பார்ப்பாகும். 

விவசாய அமைச்சால் செய்யமுடியாத அதிகமான வேலைகளை கடந்த காலங்களில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மூலம் நிறைவேற்றியுள்ளோம். பத்து இலட்சம் ஏற்றுமதிப் பயிர் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இன்று அதனை அடையாளப்படுத்து முகமாக அமைச்சு அதிகாரிகளுக்கு T.J.C மாங்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. 

அதேபோல் 02 இலட்சம் கன்றுகளை நாடுபூராவும் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018ம் ஆண்டு 10 கோடி கன்றுகளை விநியோகிப்பதே எமது இலக்காக இருந்தது. இவ்வருடம் நாம் 500 இலட்சம் கன்றுகளை வழங்கவுள்ளோம். 12000 மருத்துவ முகாம்களை நாடுபூராவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இல்லாதோரை இருப்போராக்குவதே எமது முக்கிய பொறுப்பு. மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் இந்த உயர்ந்த கொள்கையை நாம் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். 14 இலட்சம் பேர் தற்போது சமுர்த்தி நன்மைகளை பெறுகின்றனர். இந்த வருடத்தில் புதிதாக 08 இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவி வழங்குவதும் எமது திட்டமாக உள்ளது.

No comments:

Post a Comment