வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்ப முயன்றவர் தடுப்புக் காவலில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்ப முயன்றவர் தடுப்புக் காவலில்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையை திசை திருப்ப முயன்ற ஒருவரை கைது செய்து 90 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் 19 ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவரை இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு துப்பாக்கியையும் எடுத்துச் சென்றிருந்தனர். 

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சி.ஜ.டி பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்கா தலைமையிலான சி.ஜ.டி. யினர் விசாரணையினை மேற்கொண்டுவரும் நிலையில் கரையக்கந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியும் என சி.ஜ.டி. யினரிடம் தெரிவித்ததுவிட்டு பின்னர் தெரியாது என இந்த விசாரணையை திசைதிருப்பியுள்ளார். 

இதனையடுத்து இவரை சி.ஜ.டி. யினர் பொலிஸ் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க தீர்மாணிக்கப்பட்டு அவரை கைது செய்து 90 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.; 

இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்ட இருவரையும் 90 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவ் விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள், பெண்கள் என 50 மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் பல கோணங்களில் சி.ஜ.டி.யினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

சரவணன்

No comments:

Post a Comment