அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 16, 2019

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (21) முன்னர் வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான மூவரடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

No comments:

Post a Comment