பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலிருந்து, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர தனிப்பட்ட காரணத்தினால் விலகியுள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் பிரின்ட்ர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதால், அவரால் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரிவித்து கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி தீபாலி விஜேசுந்தர அங்கம் வகிக்காத வேறொரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுவை நாளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment