மீராவோடை ஆட்டோ சங்கத்தின் கோரிக்கையினை நிறைவேற்றித் தருவதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உறுதிமொழி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

மீராவோடை ஆட்டோ சங்கத்தின் கோரிக்கையினை நிறைவேற்றித் தருவதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உறுதிமொழி

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை, பதுரியா நகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இயங்கிவரும் ஆட்டோ சங்கத்தினர் நேற்று (30) இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை அமைச்சரின் இல்லத்தில் சந்தித்தனர்.

மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஆட்டோ சங்கத்தினர் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

இதன்போது ஆட்டோ சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஏற்றுக் கொண்டு அக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதிமொழி வழங்கினார்.

எமது பகுதியில் காணப்படுகின்ற எந்த அமைப்பென்றாலும், சங்கமென்றாலும் ஒருமித்த கருத்தோடு செயற்பட்டு எமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து அதனால் கிடைக்கப்படுகின்ற பயன்களை அடைந்து கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த ஆட்டோ சங்கத்தின் புதிய காரியாலயம் ஒன்று விரைவில் மீராவோடை கிண்ணையடி வீதியில் திறக்கப்படவுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்கள் திறந்து வைப்பார் என்றும் ஆட்டோ சங்க தலைவர் மௌலவி ஜமீல் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது அமைச்சரின் இணைப்பாளர் ஐ.எம்.றிஸ்வின் கருத்துத் தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் அனைவரும் ஒற்றுமையோடு செயற்பட்டு அரசியல் ரீதியாக எமக்கு கிடைக்கின்ற தேவைகளை நாம் பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

இச் சந்திப்பின் போது அமைச்சரின் இணைப்பாளர்களான ஏ.அக்பர், எம்.எஸ்.எம்.றிஸ்மின், மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்கத் தலைவர் ஏ.ஜீ.றபீக், வட்டாரக் குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment