சுங்க அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

சுங்க அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு

இலங்கை சுங்கத்தின் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய கூறினார். 

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக இலங்கை சுங்க சேவையிலே அல்லது நிர்வாக சேவை தகுதியோ இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமானது. 

அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மாற்றும் வரையில் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு நடத்தப்படும் என்று விபுல மினுவன்பிட்டிய கூறினார். 

இதேவேளை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நிர்வாக சேவை அதிகாரி அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் கூறியுள்ளது. அந்த நியமனம் சட்ட ரீதியானதல்ல என்று அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா கூறினார்.

No comments:

Post a Comment