சொத்து தகராறினால் சகோதரனால் கொலை செய்யப்பட்ட தம்பி - பொத்துவிலில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 4, 2019

சொத்து தகராறினால் சகோதரனால் கொலை செய்யப்பட்ட தம்பி - பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில் 05, அறுகம்பை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு சுமார் 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்தேகநபர் தனது தம்பியை போத்தல் ஒன்றினால் தாக்கியுள்ளார். இதனையடுத்து பாரிய காயங்களுக்குள்ளான அவர், பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பத்தில், பொத்துவில் 05, அறுகம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான, முஹம்மது இப்ராஹிம் ஜெலீல் என்பவரே மரணமடைந்துள்ளார்.

காணிப் பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், குறித்த சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பொத்துவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment