வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களாக மார்ஷல் பெரேரா மற்றும் அசாத் சாலி ? - News View

About Us

About Us

Breaking

Thursday, January 3, 2019

வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களாக மார்ஷல் பெரேரா மற்றும் அசாத் சாலி ?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில் இன்று புதிய நியமனங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வட. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment