'குஷ்' போதைப் பொருளுடன் ஈரான் யுவதி கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

'குஷ்' போதைப் பொருளுடன் ஈரான் யுவதி கைது

'குஷ்' (KUSH) எனும் 400 கிராம் கஞ்சா வகை போதை பொருளுடன் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) அதிகாலை கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் வந்த, ஈரான் பெண் (24) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை சோதனையிட்டபோது, அவரது பயணப் பொதியின் அடியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த போதை பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் போதை தடுப்பு கட்டுநாயக்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment