போலி நாணயத்தாள்களுடன் 52 வயது நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

போலி நாணயத்தாள்களுடன் 52 வயது நபர் கைது

திருகோணமலை, ரொட்டவெவவில் சுமார் ரூபா இரண்டு லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் 52 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) இரவு 8.10 மணியளவில் மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ரொட்டவெவ மயான வீதியில் வைத்து மொறவெவ பொலிஸாரினால் இந்த சந்தேக நபர்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நபரிடம் ரூபா 5,000 போலி நாணயத்தாள்கள் 16, ரூபா 1,000 போலி நாணயத்தாள்கள் 95 கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் திருகோணமலை ரொட்டவெவவில் வசிக்கும் 52 வயதான நபர் என போலீசார் தெரிவித்தனர்.

குறித்த நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment